இனி மருத்துவரை 15 நிமிடங்களுக்குள் அணுகலாமா? புதிய சேவை அறிமுகம்!!
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவில் உடனடி சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் இப்போது 15 நிமிடங்களுக்குள் காணலாம்.
புதிதாக அறிமுகமாகி உள்ள புதிய தொலைமருத்துவச் சேவை உதவியுடன் 15 நிமிடங்களுக்குள் அவசரப் பிரிவில் உடனடி சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் மருத்துவரை அணுக முடியும்.அதனை சிங்கப்பூர் பொது மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
தினமும் சராசரியாக 300 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வருகை அளிக்கின்றனர்.
அவர்களில் 50 முதல் 70 நோயாளிகள் அவசரமற்ற தேவைகளுக்காக நாடுவதுண்டு.
முன்னதாக சில பிரச்சனைகளுடன் வரும் நோயாளிகள் 7 மணி நேரம் வரை மருத்துவரை காண காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இனி பொது மருத்துவரைச் சந்திக்க இணையம் வாயிலாக காண முடியும்.
இந்த புதிய சேவை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 6 மாதங்கள் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.
இந்த புதிய முயற்சி அவசர சிகிச்சை பிரிவின் வேலைச் சுமையை சுமார் 20 சதவீதம் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
Follow us on : click here