தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? நிலவரம் என்ன?

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? நிலவரம் என்ன?

2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் சென்டர் ஓபனில் இருக்கிறதா? அதன் தற்போதைய நிலவரம் என்ன? டெஸ்ட் அடிப்பதற்கு அட்மிஷன் போடுகிறார்களா? என்பதை பற்றியெல்லாம் இப்பதிவில் தெளிவாக காண்போம்.

தற்போது அனைத்து இன்ஸ்டிடியூட்களும் அதன் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர்.Quota குறைவாக இருப்பதால் புது அட்மிஷன்கள் போடுவதில்லை.இதற்குமுன் அட்மிஷன் போட்டவர்களுக்கு மட்டும் டெஸ்ட் அடிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் அடிப்பதற்காக அட்மிஷன் போட்டால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டி வரும்.எந்த இன்ஸ்டிடியூட்யும் டெஸ்ட் அடிப்பதற்காக புது அட்மிஷன்கள் போடுவதில்லை.ஆனால் ஒரு சில ஏஜென்ட்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர்.

டெஸ்ட் அடித்து தான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ளுங்கள்.அதற்கு பணம் கட்ட தேவையில்லை.உங்களுக்கு இன்ஸ்டிடியூட்டிலிருந்து அழைப்பு வரும் வரை வேறு வேலை செய்யுங்கள்.ஏனென்றால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம்.உங்களை தொடர்பு கொள்ளும் போது இன்ஸ்டிடியூட் சென்று டெஸ்ட் அடியுங்கள்.

நீங்கள் டெஸ்ட் அடித்து தான் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று காத்திருந்தால் தற்போது அதற்கான சூழ்நிலை இல்லை. டெஸ்ட் அடித்து செல்வதை தவிர மற்ற பாஸ்களில் செல்ல முயற்சி செய்யுங்கள். சிங்கப்பூர் மட்டுமன்றி சவூதி அரேபியா ,துபாய் இது போன்ற நாடுகளுக்கும் முயற்சி செய்து பாருங்கள்.அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் முயற்சி செய்யுங்கள்.

சிங்கப்பூரை தவிர மற்ற நாடுகளுக்கான வேலை வாய்ப்பு தகவல்கள் sgtamilan இணையப்பக்கத்தில் நாள்தோறும் பதிவிட்டு வருகிறோம். தொடர்ந்து www.sgtamilan.com இணைந்திருங்கள்.