சிங்கப்பூருக்கு செல்ல பல பாஸ்கள் உள்ளன. TEP Pass, TWP Pass அதில் அடங்கும். இவ்விரண்டிற்கான பாஸ்களின் பெர்மிட் கால அவகாசம் மூன்று மாதம் மட்டுமே. ஏதேனும் வாய்ப்பு இருந்தால் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும். மூன்று மாத பெர்மிட் காலம் முடிந்தவுடன் கண்டிப்பாக தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும்.TEP Pass குறித்து பலருக்கு கேள்விகள் உள்ளன. அதில் ஒரு கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்வோம்.அதற்கான விளக்கத்தை இப்பதிவினை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
TEP Pass இல் சென்றால் E Pass, S Pass க்கு மாற முடியுமா? அல்லது நம் திறமையைக் கண்டு முதலாளிகளே E Pass, S Pass க்கு மாற்றுவார்களா?
நீங்கள் வேலைச் செய்யும் கம்பெனியின் முதலாளி நினைத்தால் TEP பாஸிலிருந்து இருந்து E Pass அல்லது S Pass க்கு மாற்ற முடியும். நீங்கள் நன்கு வேலைச் செய்தால் மட்டுமே இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.
ஏஜென்ட்கள் TEP Pass பற்றி கூறுவது :
சிங்கப்பூருக்கு TEP Pass இல் சென்றால் மூன்று மாதங்களுக்கு பிறகு E Pass அல்லது S Pass க்கு மாறி கொள்ளலாம் என்று ஒரு சில ஏஜென்ட்கள் கூறுவார்கள்.மேலும் அதற்கான பணத்தையும் சேர்த்து கட்டணத் தொகையாக பெற்றுக் கொள்வார்கள்.
பொதுவாக TEP Pass க்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை கட்டணமாக வாங்க வேண்டும்.ஆனால் E Pass அல்லது S Pass க்கு மாற முடியும் என்று கூறி நான்கரை முதல் ஐந்து லட்சம் வரை கட்டணமாக ஏஜென்ட்கள் வசூலிக்கின்றனர்.
நீங்கள் எந்த வேலைக்கு சென்றீர்களோ அந்த வேலை பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது அல்லது கம்பெனியின் முதலாளி E Pass, S Pass க்கு மாற்றுவார்களா என்பதும் கேள்விக்குறியே….நீங்கள் செலுத்திய பணம் திரும்ப கிடைக்குமா? என்பதும் கேள்விகுறி தான்.அதனால் மிகவும் குறைவான கட்டணத்தைக் கட்டி TEP பாஸில் செல்லுங்கள்.
Follow us on : click here ⬇️
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg