Singapore News in Tamil

குறைந்தது மூன்று தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன்மூலம் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியுமா?

சிங்கப்பூரில் 5 வயதுக்கும்,11 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளிடம் கிருமி தொற்றுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பு இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியது. சுமார் 28 விழுக்காடு குழந்தைகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 28-ஆம் தேதி நிலவரப்படி நோய் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பு உடையவர்கள் சுமார் 81 விழுக்காட்டினர்.

12 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 87 விழுக்காட்டினர் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளனர்.

60 வயதுக்கும்மேல் உடைய சுமார் 89 விழுக்காட்டினர் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் 5-ஆம் தேதியிலிருந்து கோவிட்-19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அன்றாட சேர்வோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல கூடியுள்ளது.

அதோடு, வாரந்தோறும் பதிவாகும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நோய் தொற்றின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் படி இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் அன்றாட சராசரி எண்ணிக்கை 300 க்கும் அதிகம்.

அந்த எண்ணிக்கை 27,000 க்கும் அதிகமாக பதிவானது.

கிருமி தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு குறைந்தது மூன்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் தடுக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியது.