சிங்கப்பூருக்கு வருகைப் புரியும் கம்போடியா பிரதமர்!!
கம்போடிய பிரதமர் Hun Manet சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அவர் இன்று(ஜூன் 18) சிங்கப்பூருக்கு வருகைப் புரிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு.Hun உடன் கம்போடியா அமைச்சர்கள், வர்த்தக தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் வருவார்கள்.
சிங்கப்பூர் பிரதமர் திரு.லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கம்போடியா பிரதமராக திரு.Hun Manet கடந்த ஆண்டு பதவியேற்றார்.
அதன் பிறகு சிங்கப்பூருக்கு வருகைப் புரிவது இதுவே முதல்முறை.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம்,பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உள்ளிட்டோரைச் சந்திப்பார்.
மேலும் கம்போடியா-சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டிலும் அவர் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here