அரசு முத்திரையை இழந்த கேட்பரி சாக்லெட் நிறுவனம்…!!!

அரசு முத்திரையை இழந்த கேட்பரி சாக்லெட் நிறுவனம்...!!!

கேட்பரி சாக்லெட் நிறுவனம் தனது அரச முத்திரையை இழந்துள்ளது.

170 ஆண்டுகளில் கேட்டபரிக்கு இப்படி நடந்தது இதுவே முதல் முறையாகும்.

அரச முத்திரை கொண்ட நிறுவனங்கள் அரச குடும்பத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அதிகாரம் கொண்டது.

அந்த நிறுவனங்கள் அரசு முத்திரையை விளம்பரங்களில் பயன்படுத்தலாம்.

1854 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணி கேட்பரிக்கு அரச முத்திரையை வழங்கினார்.

ஆனால் சார்லஸ் மன்னரின் ஆட்சியில் கேட்பரி நிறுவனம் தனது முத்திரையை இழந்தது.

கேட்பரி ஐ வைத்திருக்கும் Mondelez International நிறுவனம் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.

பிரச்சாரக் குழு B4Ukraine இன்னும் ரஷ்யாவில் இயங்கும் நிறுவனங்களில் இருந்து அரச முத்திரையை அகற்றுமாறு மன்னர் சார்லஸைக் கேட்டுக் கொண்டது.