ByteDance ஊழியர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! அதற்கு காரணம்?

ByteDance ஊழியர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! அதற்கு காரணம்?

Tiktok செயலியை நிர்வகிக்கும் ByteDance ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.சுமார் 130 பேர் நோய்வாய்பட்டனர்.

அங்கு விநியோகிக்கப்பட்ட உணவே அதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளது.

உடல்நலக் கோளாறு ஏற்பட்ட ஊழியர்கள் Yun Hai Yao,Pu Tien Services நிறுவனங்களின் உணவுகளைச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது .

அதன் பின் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு தற்காலிக தடை விதித்தது.

தயாரிக்கப்பட்ட அணைத்து உணவுகளையும் அப்புறப்படுத்த சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது.

நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுத்ததையடுத்து ஆகஸ்ட் மாதம் தற்காலிக தடை நீக்கப்பட்டது.