சிங்கப்பூரில் தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாததால் வர்த்தகம் வளர்கிறது!

சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக அக்கம்பக்கம் விழா நடைபெற்றது.கடந்த 3 மாதங்களில் குடியிருப்பாளர்கள் அக்கம்பக்கம் கடைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கு இந்த விழாவும் ஒரு முக்கிய காரணம்.இந்த விழாவின் நோக்கமானது உணவங்காடிகளையும்,சில்லறை விற்பனைக் கடைகளையும் ஓர் துடிப்பு மிக்க இடமாக மாற வேண்டும்.

சில்லறை விற்பனை கடைகளில் வியாபாரம் ஓரளவு உயர்ந்துள்ளது. அதே போல் உணவகாடிகளின் வர்த்தகத்தின் விழுக்காடு 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

அக்கம்பக்கக் கடைகளில் கடந்த மூன்று மாதங்களில் செலவிட்ட தொகை கிட்டத்தட்ட 3 மில்லியனைத் தொட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டில் 330,000 வெள்ளி மட்டுமே செலவிடப்பட்டன. தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வர்த்தகம் வளர்கிறது.

Exit mobile version