குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ!! திணறிய நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்!!சவலாக அமைந்த வெப்பநிலை!!

அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ பரவியது.

இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியதால் தீயணைப்பு வீரர்களுக்கு காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு காரணம் இப்பகுதியில் நிலவும் வறண்ட காற்று மற்றும் உயரும் வெப்பநிலை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை நான்கு வீடுகள், ஒரு கொட்டகை உட்பட 11000 ஹெக்டருக்கு மேல் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய இயற்கை பேரழிவுகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.