
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய பும்ரா குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய விதம் சற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் கடந்த ஆண்டு 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
அதுவும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு வருடத்திற்கு விளையாடுவதற்கு இந்திய அணியிடம் அட்டவணைகள் உள்ளன.
கிரிக்கெட் வீரர்கள் போதிய ஓய்வு இல்லாமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதால் காயமடையும் சூழ்நிலை உருவாகிறது.
ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கபில்தேவ் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய வீரர்கள் ஆண்டுக்கு 10 மாதங்கள் விளையாடுவதால், காயங்கள் ஏற்படுவது சகஜம்தான்.எனவே காயங்கள் பொதுவானவை.
மேலும் பும்ரா காயம் அடைந்ததாக பேசுகிறீர்கள், அணியில் இல்லாத ஒருவரை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? இது ஒரு குழு விளையாட்டு, அங்கு அணி வெற்றி பெறுகிறது, தனிநபர் அல்ல.
இது பூப்பந்து, டென்னிஸ் அல்லது கோல்ஃப் விளையாட்டு அல்ல. இது ஒரு குழுவாக விளையாடும் கிரிக்கெட் போட்டி என்று கூறினார்.
உங்கள் அணியில் ஒரு முக்கிய வீரர் காயம் அடைந்தால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே இப்போதைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் மட்டுமே. இளைஞர்களின் நம்பிக்கை நம்பமுடியாதது.
நாங்கள் இளைஞர்களாக இருக்கும் பொழுது அவ்வளவு தன்நம்பிக்கை இல்லை. எனவே அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.