உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

பிரேசிலின் முன்னணி கால்பந்து வீரர்
நெய்மாருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பிரேசில் அணி 2026 உலகக் கோப்பைக்கான தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளை அதன் சொந்த மண்ணில் 20-ஆம் தேதி கொலம்பியாவையும், 25 ஆம் தேதி அர்ஜென்டினாவையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில் நெய்மார் இடம் பெற்று இருந்தார்.

33 வயதான நெய்மார் சாண்டோஸ் கிளப்பிற்காக கடந்த வாரம் விளையாடினார்.அந்த நேரத்தில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான பிரேசில் அணியில் நெய்மார் இடம் பெறவில்லை.

நட்சத்திர வீரர் நெய்மாரின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.