தெற்கு ஆஸ்திரேலியாவில் Adelaide-ஐ சேர்ந்த 15 வயது சிறுவன் சுறா தாக்கி உயிரிழந்தான்.இச்சம்பவம் டிசம்பர் 28ஆம் தேதி அன்று Yorke தீபகற்பகத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமான Ethel கடற்கரைக்கு அருகில் நடந்தது.
சிறுவன் அங்கு சர்ஃபிங் செய்வதற்காக வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சுறா தாக்கிய போது சிறுவன் கடற்கரையில் இருந்து 30 மீட்டர் முதல் 40 மீட்டர் தொலைவில் இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுவனை மீட்பதற்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சிறுவனின் உடல் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சிறுவனை தாக்கிய சுறா பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும், அப்பகுதியில் பெரிய வெள்ளை சுறாக்கள் அதிகம் காணப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த ஐந்தாவது சுறா தாக்குதல் இதுவாகும்.