கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிய சிறுவன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிய சிறுவன் மருத்துவமனையில் அனுமதி...!!!

சிங்கப்பூர்:தெம்பனிஸ் பகுதியில் உள்ள Century square வணிக வளாகத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

கடைத் தொகுதியில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடைத் தொகுதியில் Igloo எனப்படும் பனிக்கட்டிவீடு போன்ற அமைப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​திடீரென சத்தமாக அழத் தொடங்கினான்.

அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவனது கால் விரல்களில் ரத்தம் வடிந்தது.

காயமடைந்த சிறுவன் KK பெண்கள் சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

சிறுவன் எப்படி காயமடைந்தான் என்பது தெரியவில்லை.

Century square கடைத் தொகுதியின் கிறிஸ்துமஸ் அலங்காரமான Merry magical igloo தற்காலிகமாக மூடப்படும் என்று கூறியது.