மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!!

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்...!!!!

அழகாக இருக்கும் பெண்களை வருணிப்பதற்காக பெரியவர்கள் அவ மூக்கு முழியுமா நல்லா லட்சணமா இருக்கா..என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.மூக்கு அழகாக இருக்கும் பெண்கள் வசீகரா தோற்றத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட மூக்கு எடுப்பான தோற்றத்துடன் இருந்தால் முகமே தனித்துவ அழகுடன் காட்சி தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இதற்காக சிலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தும் பலன் இருக்காது.எனவே மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம்.

தேவையான பொருட்கள்:-

🔶️ கோதுமை மாவு தவிடு – ஒரு தேக்கரண்டி

🔶️ சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

🔶️ பசும் பால் – ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

✨️ முதலில் 10 கிராம் கோதுமையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்கவும்.

✨️ பிறகு இந்த கோதுமை மாவை ஒரு சல்லடையில் போட்டு சலித்து அதன் தவிட்டை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

✨️ இந்தக் கோதுமை தவிடுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

✨️ பின்பு இந்தக் கலவையுடன் ஒன்றரை டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி 15 நிமிடம் உலர விடவும்.

✨️ பின்னர் வெதுவெதுப்பான நீரை மூக்கின் மீது ஊற்றி நன்றாக தேய்த்து எடுத்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.

✨️ கோதுமை தவிடு இல்லாதவர் கம்பு அல்லது கேழ்வரகு தவிடு கூட பயன்படுத்தலாம்.

✨️ அதேபோல வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக வெள்ளை ரவையை இதற்குப் பயன்படுத்தலாம்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

🔶️ அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி

🔶️ வெள்ளை சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

🔶️ ரவை – ஒரு தேக்கரண்டி

🔶️ பசும் பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

✨️ ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

✨️ இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை ரவையைச் சேர்த்து கலக்க வேண்டும்.

✨️ அதன் பிறகு பசும் பாலை இரண்டு டீஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் ஆக எடுத்துக் கொள்ளவும்.

✨️ பிறகு இந்த பேஸ்ட்டை மூக்கைச் சுற்றி நன்றாக தேய்க்கவும்.

✨️ பின்னர் வெதுவெதுப்பான நீரில் மூக்கை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதால் கரும்புள்ளிகள் நீங்கும்.