நாட்டிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!!

நாட்டிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!!

பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி 1.8 டன் சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

அதன் மதிப்பு சுமார் 230 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படங்காஸ் மாகாணத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு வேனில் டன் கணக்கில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இது நாட்டிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த கால நடவடிக்கைகளைப் போலல்லாமல், உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று அதிபர் மார்கோஸ் கூறினார்.

போதைப்பொருள் போருக்கு வன்முறையற்ற அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. அவை எங்கு தயாரிக்கப்பட்டது? உள்நாட்டிலா? அல்லது வெளிநாட்டிலா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளதாக மார்கோஸ் குறிப்பிட்டுள்ளார்.