மக்களே எச்சரிக்கையாக இருங்கள்……..அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியைக் கண்டுபிடிப்பது எப்படி?

சிங்கப்பூரில் தற்போது புதிய மோசடி சம்பவங்கள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியது. போலி குறுஞ்செய்திகளால் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் அனுப்புநராக MOH என்று இருக்கும்.அதில் கொடுக்கப்பட்டுள்ளgo.gov.sg என்று தொடங்கும். HealthierSG திட்டம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திட்டம். சுகாதார அமைச்சகம் நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

தற்போது அதன்மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

போலி குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட வாட்ஸாப் செயலின் லிங்க்யை கிளிக் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும்.மேல் தகவல்களுக்காக கிளிக் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும்.

அதன்பின் செயலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மற்றொரு தகவல் வரும். அதனை பதிவிறக்கம் செய்தவுடன் மொபைல் போன் மோசடிக்காரர் வசம் போய்விடும். அதன்பின் அனைத்து தகவல்களும் திருடப்படும்.

பொதுமக்கள் இத்தகைய குறுஞ்செய்திகள் மூலம் ஏமாற வேண்டாம். தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.