சிங்கப்பூருக்கு இந்தியாவுக்கும் இடையேயான ......
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே அந்நிய நேரடி முதலீடு வளரும்” – விவியன் பாலகிருஷ்ணன்
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அந்நிய நேரடி முதலீடு மேம்படும் என்று வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு முதலீடுகள் 30 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.
முதலீடுகள் தொடர்ந்து வளரும் என்று நம்புவதாகவும், அதற்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2027ல் மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார.
இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் பொருட்டு சிங்கப்பூர் அங்குள்ள வாய்ப்புகளை ஆராயும் என்று கூறினார்.
Follow us on : click here