அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்...!!!

11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பங்கேற்ற 13 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோதின.
இந்நிலையில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மோகன் பாகன் சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் எப்.சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் 3 முதல் 6வது இடத்தைப் பிடித்த பெங்களூரு எப்.சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி, ஜாம்ஷெட்பூர் எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி ஆகியவை ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெங்களூருவில் நடந்த முதல் எலிமினேஷன் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், முன்னாள் சாம்பியன் பெங்களூரு அணியும் மோதின.
தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி, முதல் பாதியின் முடிவில் இரண்டு கோல்களை அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்களை அடித்தது.
இறுதியில், பெங்களூரு எப்.சி அணி, கூடுதல் நேரத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனால் பெங்களூரு எப்.சி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் பெங்களூரு எப்.சி அணி, எப்.சி கோவா அணியை எதிர்கொள்ளும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan