சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் தன்னாட்சி பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்து கேள்வி கேட்டார். அவர்களில் அதிக வருமானம் கொண்டோர் விகிதம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டண சலுகை குறித்தும் கேட்டார்.
அதற்கான பதிலை அமைச்சர் சான் சுன் சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
விண்ணப்பிப்பவர்கள் எந்நாட்டவர்,நாட்டின் வருமான அளவு எவ்வளவு போன்ற அடிப்படையில் சிங்கப்பூர் கல்வி கட்டண சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்று கூறினார்.
அது அவர்களின் திறமையை கொண்டே தீர்மானிக்கப்படுவதாக அவர் கூறினார்.
தன்னாட்சி பல்கலைகழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 80 விழுக்காட்டினருக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறினார்.
சலுகை பெறுவோர் படித்து முடித்தவுடன் சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகளாவது வேலை செய்ய வேண்டும் என்றார்.