வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்டதால்... 5 கூர்க்கா அதிகாரிகளுக்குச் சிறை...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்ட 5 கூர்க்கா அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மில்லியன் கணக்கான டாலர்கள் அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜூன் 2021 இல், பிரதிக் தமாங் என்ற நபர் கூர்க்கா அதிகாரிகளின் முகாமில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சேவையைத் தொடங்கினார்.
பின்னர் அவர் ஓய்வு பெற்று நேபாளம் திரும்பியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவர் இன்னும் பிடிப்படாமல் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு (2023) பிப்ரவரியில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு மாதம் கழித்து கூர்க்கா அதிகாரிகள் முகாமில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் 32 முதல் 44
வயதுக்குட்பட்டவர்கள்.
குற்றத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக ஐவருக்கும் 4 வாரங்கள் முதல் 5 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களில், 40 வயதான சீதாராம் தமாங் அதிகபட்சமாக 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
அவர் 2.87 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சேவையை உரிமம் இல்லாமல் நடத்திய குற்றத்திற்காக 125,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here