அழகிய மலர்..!!அழுகிய வாசனை..!! கொண்ட செடியைக் காண அலைமோதும் கூட்டம்…!!!

அழகிய மலர்..!!அழுகிய வாசனை..!! கொண்ட செடியைக் காண அலைமோதும் கூட்டம்...!!!

அதிசய செடியாக கருதப்படும் ‘corpse plant’ கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியதாம்.

இச்செடியின் மலர் இரண்டு நாட்கள் வரை மட்டுமே பூத்திருக்குமாம்.

இந்த மலரின் அதிசயம் என்னவென்றால் அது அழுகுவதை போன்ற நாற்றத்தை வீசுமாம்..

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள ஜீலோங் பூந்தோட்டத்தில் உள்ள செடியில் இந்தப் பூ பூத்தது.

இந்தச் செடியின் அதிசயத்தை பார்க்கவும் அதிலிருந்து வரும் வாசனையை நுகர்வதற்காகவும் மக்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறதாம்.

மலரை நுகர்ந்த சிலருக்கு வாந்தி வரும் நிலைக்கு ஆளாயினர்.

அந்த வாசனையை நுகர்ந்த சிலர் “அழுக்கு காலுறைகள்’,’மடிந்த விலங்கு’ என பலவிதங்களில் அதை வருணித்தனர்.

அந்த வாசனை பொதுவாக மனிதர்களுக்கு வெறுப்பாக இருந்தாலும், அது பூச்சிகளை ஈர்க்கிறது.

பூக்களை தேடி வரும் பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.