வெளிநாட்டு இல்ல பணிப்பெண்களுக்கு கற்பிக்கப்படும் அடிப்படை மருத்துவ திறன்கள்…!!

வெளிநாட்டு இல்ல பணிப்பெண்களுக்கு கற்பிக்கப்படும் அடிப்படை மருத்துவ திறன்கள்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் இப்போது நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களைக் கொண்ட முதலாளிகளைப் பராமரிப்பதற்கான அடிப்படை மருத்துவத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.

மருத்துவ வல்லுநர்கள் பணிப் பெண்களுக்கு அந்த திறன்களை கற்பிக்கிறார்கள்.

இரத்த அழுத்த மானிட்டர், இரத்த சர்க்கரை மானிட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவது திறன்களில் அடங்கும்.

சிங்ஹெல்த் குழுமம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே முதியோர்களின் உடல்நலத் தேவைகளை அறிந்து அவர்களுக்குக் கவனிப்பை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து திறன் பயிற்சி பயிற்சிகள் நடைபெற்றன.

கடந்த நான்கு மாதங்களில், 5 பயிற்சி வகுப்புகள் தெம்பனிஸ் மற்றும் புக்கிட் மேரா  பலதுறை மருந்தகங்களில் நடத்தப்பட்டன.

இதில் 60க்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டனர்.

இத்தகைய அடிப்படை மருத்துவ கவனிப்பு பயிற்சியினால் அவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதோடு முதலாளிகளுக்கு ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மகத்தான சேவையையும் அவர்களால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.