சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட 3 பொருட்கள் ஆன்லைனனில் விற்கப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
அந்த மூன்று பொருட்களும் உடல் எடையைக் குறைக்க உதவும் என்றும், நச்சுத்தன்மையை நீக்கும் என்று கூறி விற்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இ-கமெர்ஸ் தளங்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
2 பொருட்களில் எடைக் குறைப்பு மருந்து உள்ளது. இந்த மருந்து 2010 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த இரண்டு பொருட்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
மீதமுள்ள ஒரு பொருளில் காணப்படும் ரசாயனம் வயிற்றுவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மூன்று பொருட்களும் மலேசியாவில் இருந்து வந்தவை என சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக விற்பனையை நிறுத்துமாறு கடைக்காரர்களுக்கு உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.