சிகரெட் தோற்றம் கொண்ட உணவை விற்பனை செய்வதற்குத் தடை…!!!

சிகரெட் தோற்றம் கொண்ட உணவை விற்பனை செய்வதற்குத் தடை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள இரண்டு சீன உணவகங்கள் மெனுவில் இருந்து சிகரெட் போல தோற்றமளிக்கும் உணவை நீக்கியுள்ளன.

சிங்கப்பூரின் புகையிலை கட்டுப்பாடு சட்டங்களை மீரும் வகையில் உணவு அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து உணவகங்கள் நடவடிக்கை எடுத்தன.

மரினா பே, பார்க்ரோயல் கலெக்ஷனில் அமைந்துள்ள பீச் ப்ளாசம்ஸ் உணவகத்தில் நன்கு வறுக்கப்பட்ட ‘சிகார்’ சுருட்டு விற்கப்பட்டது.

.

இறால், நண்டு போன்றவை இதில் சேர்க்கப்படும்.

இதன் விலை மெனுவில் 28 வெள்ளியாக குறிப்பிட்டு இருந்தது.

சிகரெட் சாம்பலைச் சேகரிக்கப் பயன்படும் சாம்பல் தட்டு போன்ற தோற்றத்தில் உணவு பரிமாறப்படுகிறது.

டேஸ்டி கோர்ட் உணவகம் சிக்லாப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த உணவகத்திலும் இதே போன்று உணவுகள் விற்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது போன்று உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் தோற்றம் கொண்ட உணவுப் பொருள்கள் மக்களை தீய வழிகளில் செல்ல தூண்டுவது போல் இருப்பதால் இது போன்ற உணவுகள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

புகையிலை சட்டத்தின் கீழ் புகையிலை போன்ற விளையாட்டு பொருட்கள், உபகரணங்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️