மலேசியாவில் அறிவிக்கப்பட்ட தடை!! மலேசியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 31 பேர்!!

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் உள்ள பின்டாங் ஹிஜாவ் வனப்பகுதியில், சட்டவிரோதமாக கனிம வளங்களை தோண்டி எடுக்க முயன்ற 31 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களில் 21 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.21 பேரில் 16 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் வியட்நாமை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியவகை கனிம வளங்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய உள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.