செயின்ட் ஜோசப் தேவாலய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஜாமீன் மறுப்பு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புனித செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 37 வயதான பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் மிகவும் ஆபத்தானவர் என்றும் மீண்டும் குற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பஸ்நாயக்கவிற்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் கடந்த மாதம் நவம்பர் 9ஆம் தேதி பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ குவாங் ஹெங்கை வாயில் குத்தியதாக நம்பப்படுகிறது.
பஸ்நாயக்கவை விசாரணைக்காக தடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என வழக்கறிஞர் தெரிவித்தார்.
எனவே இந்த வழக்கு விசாரணையானது மீண்டும் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பஸ்நாயக்கவுக்கு ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை,அபராதம் மற்றும் கசையடிகள் விதிக்கப்படலாம்.
Follow us on : click here