பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து சாந்தி,ரக்ஷாபந்தனம்,பூர்ணா குதி,உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.பல்வேறு புனிதத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் பல்வேறு கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க  பூஜிக்கப்பட்டது. இவ்வாறு பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மங்கல இசை முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்துவந்து கோவிலை வலம் வந்தனர்.

கருடபகவான் விமானத்தைசுற்றி வர பூஜிக்கப்பட்ட புனிதநீர் விமானத்தில் ஊற்றப்பட்டது. மேலும் பரிவார தெய்வங்களான காட்டு அய்யனார், சவகரன் ஸ்வாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழா நேர்முக வர்ணனையினை இசை ஆசிரியர் பொன்னமராவதி கீரவாணி அழகு இளையராஜா செய்திருந்தார். காரையூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.