Singapore news

இளையர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு! புதிய திட்டம்!

சிங்கப்பூரில் இளையர்களிடம் போதைப் பொருட்களின் தீங்கை எடுத்துக் கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தீவிரமடைந்துள்ளதாகவும் உள்துறை துணை அமைச்சர் Faizal Ibrahim கூறினார்.

இளையர்களிடம் விழிப்புணர்வூட்டும் தீவிர நடவடிக்கைகளும் தேவைப்படுவதாக கூறினார்.

இளையர்களை வாங்கத் தூண்டும் வகையில் இணையத்தில் செயல்படுவோரைக் கவனத்தில் கொண்டு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு இது குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் மூலமாகவும், பள்ளிக்கூட இயக்கங்கள் மூலமாகவும் இளையர்களிடம் சென்றடைய முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

போதைப்பொருள் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை இளையர்கள் சமூக ஊடகங்களில் வழியாகப் பெறுகின்றனர்.இதன் மூலமாக சமூக ஊடகங்களில் போதைப் பொருள் வாங்குவதை எளிதாக்குகின்றது.

நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, ஆராயப்படுவதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் நடைமுறை, புலனாய்வு முதலிய கோணங்கள் வழிகளில் மேம்படுத்துவதாக வும் அவர் கூறினார்.