பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!!

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!!

பொன்னமராவதி,பிப்.6-
பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.காந்திசிலை முன்பாக நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணிக்கு தாசில்தார் சாந்தா முருகேசன் தலைமை தாங்கினார்.தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர் முன்னிலை வகித்தார்.

பின்னர் தொடங்கிய போதை பழக்கத்திற்கான விழிப்புணர்வில் மது அருந்துதல்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிராமிய கலைஞர்கள் பல்வேறு விதமான விழிப்புணர்வை வழங்கினர். மேலும் கிராமப்புறங்களில் போதை பழக்கத்திற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதியோர்கள், இளைஞர்கள் மது அருந்துவதும்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகளின் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை பதாகைகள் கையிலேந்தியும், கிராமிய கலை நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களுக்கு கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.