சிங்கப்பூரில் இந்தியர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி!!

சிங்கப்பூரில் இந்தியர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக நடைபெற்ற “இந்தியன் ஹால் ஆஃப் ஃபேம் சிங்கப்பூர்” எனும் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டி அவர்களை கௌரவித்து சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர் பொழுதுபோக்கு மன்றத்தில் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

சிங்கப்பூரின் பெருமைமிகு இந்தியர்களின் பட்டியலில் 18 பேர் இடம் பிடித்துள்ளனர்.

மருத்துவம், பொறியியல் ,ராணுவம், விளையாட்டு கலைகள், சமூக சேவை ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றியவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தர் ஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதில் சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இந்திய முன்னோடி மறைந்த திரு.ஹர்த்தியால் சிங் பஜாஜிற்கு சிங்கப்பூரின் உன்னத விருதான வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கப்பட்டது.

டாக்டர் உமா ராஜன், திடல் தட வீராங்கனை சாந்தி பெரேரா
மற்றும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் முன்னாள் தலைவர் T. சந்துரு உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற திரு.கந்தசாமி ஜெயமணி அவர்கள் தான் பள்ளி பருவத்திலேயே ஓட்டத்தின் மீது ஆர்வம் கொண்டால் 19 வயதிலேயே தேசிய அளவில் ‘சிங்கப்பூர் ஓப்பன்’ என்ற திடல் தடை போட்டியில் முதன் முதலில் தனது இலட்சய படிகட்டில் அடி வைத்தார்.தொடர்ந்து சிங்கப்பூரை பிரதிநிதித்து தங்கம், வெள்ளி ,வெண்கல பதக்கங்களை குவித்தார். அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அதுதான் தொடக்க புள்ளி என்றும் தனக்கு 50 வயது கடந்தும் இன்னும் விடாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்க காரணம் அவரது தந்தை என்றும் கூறினார். அந்த காலத்தில்’ big walk’என்ற நடை இருந்ததாகவும், சிறு வயது முதலே தன் தந்தையுடன் சேர்ந்து நடந்ததாகவும் அது தனக்கு பழகி விட்டதால் அதை மறப்பதற்கோ விடுவதற்கோ மனதில்லை என்று கூறினார். இவ்வாறு இவர் மூத்தோருக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கூறினார்.

மற்றொருவர் இதய நல மருத்துவர் V.P நாயர். இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது இவரது ஆசை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 இளைஞர்களின் மருத்துவ படிப்பிற்கு உதவுகிறார். தனது மருத்துவமனைக்கு வரும் மாணவர்களுக்கு கற்பித்து பயிற்சியும் அளிக்கிறார். இதனால் பயனடைந்த பலர் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் அயர்லாந்து,லண்டன், ஆஸ்திரேலியா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.


இருவருக்கும் ஒரே எண்ணம் தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்பதே.