முதியோருக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப செயலிக்கு பரிசு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘ஜியோடோகெதர்’ என்ற செயலி ‘Dell InnovateFest’போட்டியில் பரிசு பெற்றுள்ளது.
செப்டம்பர் 26 அன்று நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரின் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பத்து அணிகள் பங்கேற்றன.
‘மைண்ட்ஸ் அண்ட் லயன்ஸ் ஃப்ரெண்ட்ஸ்’ என்ற சேவை நிறுவனத்துடன் இணைந்து முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் எதிர்கொள்ளும் சமூக தனிமைப்படுத்தலுக்கு உதவுவதே போட்டியின் நோக்கமாகும்.
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் தொழில்நுட்பத்தை உருவாக்க இளைஞர்களை ஊக்குவித்தது.
பரிசு பெற்ற ‘ஜியோடுகெதர்’ செயலி, துடிப்புடன் முதுமையடைதலுக்கான நிலையங்களும் சமூக மன்றங்களும் தங்கள் வீடுகளுக்கு அருகே ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தொண்டூழியம் செய்யவும் முதியோருக்கு உதவும்.
‘ஜியோ டுகெதர்’ செயலியை சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ‘டீம் 343’ உருவாக்கியது.
பாலிடெக்னிக் பிரிவில் நீ ஆன் பாலிடெக்னிக் மாணவர்களின் ‘டீம் ஸ்னூபி’ குழு வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பரிசுகளை வழங்கினார்.
இரு குழுக்களுக்கும் தலா $10,000 வழங்கப்பட்டது.
மின்னிலக்க தீர்வுகளை அறிமுகம் செய்வதற்கு முன்னர் முதியவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடல் மற்றும் அவர்கள் மீது பரிவு காட்ட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
முதியோர்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்க இதுபோன்ற மின்னணு சாதனங்களுடன் சமூகம் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
Follow us on : click here