பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்…!!

பாலித்தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஆஸ்திரேலியப் பெண் மரணம்...!!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்தபோது படகில் 11 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர்.

அலைகள் மோதியபோது படகு நுசா பெனிடா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது அங்கு தாக்கிய ஒரு பெரிய அலையால் படகிலிருந்து 39 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக வந்த மற்றொரு அலையால் படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அருகிலிருந்த படகு உயிர் பிழைத்தவர்களை மீட்டது.

இறந்த பெண்ணின் உடலை அதிகாரிகள் மீட்டனர். உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.