ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!!

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!!

ஆஸ்திரேலியாவில் புதிய ஹெலிகாப்டர் பைலட் ஒருவர், பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பிறகு ஹில்டன் ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகாப்டரை மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பணியாற்றிய நிறுவனம் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானி தனது சக ஊழியர்களுடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹெலிகாப்டரில் இவருடன் வேறு யாரும் பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரின் நொறுங்கிய சில பாகங்கள் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்துள்ளது.

ஹோட்டலில் தங்கியிருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டலில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

அந்த ஹெலிகாப்டர் விமானி பணிபுரிந்த Nautilus Aviation நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

அவர் அனுமதியின்றி ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றுள்ளார்.

நியூசிலாந்தில் ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரை ஓட்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.