வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு……

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு......

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களை போலி ஏஜென்ட்கள் பல விதமான முறையில் மோசடி செய்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி சம்பவம் குறித்து நம் பதிவிட்டிருப்போம்.அதே போல மறறொரு சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் தற்போது பல விதமான மோசடி சம்பவங்கள் நடக்கிறது.அதில் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுவது.வடதமிழகத்தில் உள்ளவர்கள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறி வைத்து மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Viraj Management services என்ற போலி ஏஜென்சி நிறுவனம் கொல்கத்தாவில் உள்ளது.இந்த ஏஜென்சி நிறுவனம் முதலில் அலுவலகம்,வெப்சைட்,விளம்பரம் என அனைத்தையும் போலியாக உருவாக்கியுள்ளனர்.விளம்பரம் பார்த்து தொடர்பு கொண்ட நபர் கேட்கும் வேலை இருப்பதாக கூறி நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.நீங்கள் மெடிக்கல் எடுத்தால் மட்டும் போதும்.நீங்கள் தவணைமுறையில் வேலையில் சேர்ந்த பிறகு கட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி உங்களை வலையில் சிக்க வைப்பார்கள்.

அங்கு நீங்கள் சென்று மெடிக்கல் போட்ட பின் போலியான ஆஃபர் லெட்டர் கொடுப்பார்கள்.மெடிக்கலுக்கென தனியாக தொகையும் பெற்றுள்ளனர்.ஓர் குறிப்பிட்ட தொகையை கூறி நீங்கள் அதை செலுத்தியவுடன் விசா வந்துவிடும் என்று கூறுவார்கள்.அனைத்தும் தயாராக இருப்பதாகவும் நீங்கள் பணத்தை செலுத்தியவுடன் வெளிநாட்டிற்கு சென்று விடலாம் என்று கூறுவார்கள். அங்கு சென்றபின் மீதத்தொகையை செலுத்தலாம் என்று கூறுவார்கள்.அந்த ஆஃபர் லெட்டரில் இருக்கும் நிறுவனத்தின் id , மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு அது உண்மையானதா என நீங்கள் சரிபார்த்தால் அது உண்மையானது தான் என நம்ப வைக்கும் அளவிற்கு அனைத்தையும் உருவாக்கியிருப்பார்கள். அவை அவர்களே உருவாக்கியதாக இருக்கும்.நீங்களும் நம்பி பணத்தை செலுத்தி விடுவீர்கள்.

இவர்கள் விரித்த வலையில் சிக்கியவர்கள் தங்கள் பணத்தை இழந்ததோடு ஏமாந்து அந்த பணம் திரும்ப கிடைக்குமா? கிடைக்காதா? என்று தவித்து வருகின்றனர்.

நீங்கள் கவனிக்க வேண்டியவை :

ஆஃபர் லெட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் வெப்சைட்,இ-மெயில் ஐடி ஆகியவற்றின் கடைசியில் .sg அல்லது .com.sg என்று இருக்க வேண்டும்.வேறு மாதிரி இருந்தால் அது போலியானது.

முதலில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்துங்கள் நீங்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு மாதத்தவணையாக கட்டுங்கள் அல்லது உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் கூற மாட்டார்கள். உங்களுக்கான ip ,விசா வந்ததுக்கு பிறகே பணத்தை செலுத்துமாறு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் கூறுவார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி மூலமாக தான் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள்.நீங்கள் எந்த ஏஜென்சி மூலமாக செல்ல உள்ளீர்களோ அது உரிமம் பெற்றிருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

Exit mobile version