வெளிநாட்டுக்கு செல்வோர் கவனத்திற்கு.....இந்த வலையில் சிக்கி விடாதீர்கள்!!

வெளிநாடு செல்பவர்களுக்கு நடக்கும் மெடிக்கல் scam:
வெளிநாட்டிற்கு எப்படியாவது சென்று வேலை செய்ய வேண்டும், நமது குடும்பத்தை நன்றாக பார்த்துகொள்ள வேண்டும் என்பது என பல எண்ணங்களுடன் இருப்பவர்களின் கனவுகளை சுக்கு நூறாக நொறுக்கும் ஓர் மோசடியைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பெரும்பாலும் மோசடி செய்ய போலியான நிறுவனங்களை உருவாக்கி பெரிய நகரங்களை தேர்வு செய்வர்.அங்கு மெடிக்கல் சென்டர் தொடங்கி
வெளிநாட்டு வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரம் செய்வார்கள்.
அந்த விளம்பரங்களைப் பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்கள் கேட்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் எந்த வேலை கேட்டாலும் இல்லையென்று மறுக்காமல் வேலை இருக்கிறது என்று கூறுவார்கள்.
குறைந்த பணத்தை செலுத்துங்கள் மீதமுள்ள பணத்தை வெளிநாட்டிற்கு சென்ற பின் செலுத்தினால் போதும் அல்லது உங்களுடைய சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வார்கள் என்று கூறி அவர்களின் வலையில் உங்களைச் சிக்க வைக்கிறார்கள்.
மேலும் போலியான ஆஃபர் லெட்டர் தயார் செய்வது மட்டுமல்லாமல் வெப்சைட்,போன் நம்பர், முகவரி மற்றும் இமெயில் போன்றவைகளையும் போலியாக உருவாக்கி உங்களை நம்ப வைப்பார்கள் .
அதோடு சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களில் போலியான முறையில் ஆஃபர் லெட்டர் தயார் செய்கிறார்கள். அவர்கள் கூறும் இடத்தில் மட்டுமே மெடிக்கல் போட வேண்டும் என்றும் நீங்கள் வேறு இடத்தில் மெடிக்கல் போடக்கூடாது என்று கூறுவார்கள்.
மெடிக்கல் கட்டணமாக ₹7000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு கட்டணம் வாங்குவதில்லை.
மோசடிக்காரர்கள் சரியான ரிப்போர்ட் கொடுக்காமல் போலியான ரிப்போர்ட் தயார் செய்து கொடுக்கிறார்கள்.
மெடிக்கல் முடிந்தவுடன் மோசடி செய்பவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராது.
நீங்களாகவே அவர்களைத் தொடர்பு கொண்டால், ” நீங்கள் பிட்டாக இருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் சிங்கப்பூர் சென்று விடலாம் என்றும், தயார் நிலையில் இருக்கும்படி” என்று சொல்வார்கள்.
காத்திருங்கள் காத்திருங்கள் என்று நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் கூறுவார்கள். நாட்கள் போக போக நீங்களும் மெடிக்கலுக்கு தான் கட்டணம் செலுத்தியுள்ளோம் வேறு இடத்தில் முயற்சி செய்வோம் என்று நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
வேலைக்காக பணம் செலுத்தி இருந்தால் தான் பிரச்சனை வரும் மெடிக்கலுக்காக பணம் செலுத்தியதால் எந்த பிரச்சனைகளும் வராது என்பதுதான் மோசடிக்காரர்களின் எண்ணம் ஆகும்.
தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் இது போன்ற மோசடி சம்பவங்களும் நடக்கிறது.
குறைந்த பணத்தைச் செலுத்தி விட்டு சிங்கப்பூருக்கு சென்ற பின் மீதமுள்ள பணத்தை செலுத்தலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிஸ்கள் கூற மாட்டார்கள்.
நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே பிளைட் டிக்கெட் போடுவார்கள்.
இல்லையென்றால் டிக்கெட் தேதியை மாற்றி போடுவார்களே தவிர அங்கு சென்று செலுத்தலாம் என்று சொல்ல மாட்டார்கள்.
மெடிக்கலுக்கு 2500 முதல் 4000 வரைக்குள் செலவாகும். அதற்குமேல் செலவாகாது.
அதற்கு மேல் அதிகமாக கேட்டால் அது மோசடியாக இருக்கலாம்.
இது போன்ற மோசடிக்காரர்களின் வலையில் சிக்காமல் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். உங்கள் கனவுகள் நிறைவேறவும், இது போன்ற முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் SGTAMILAN இணையப்பக்கத்தில் இணைந்திருங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan