சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு........

எந்தெந்த பாஸ்களுக்கு எத்தனை நாட்களில் ip வரும்? அது எத்தனை நாட்களுக்குள் MOM வெப்சைட்டில் Show ஆகும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.
சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல MOM இல் விண்ணப்பித்த நாளன்றே நீங்கள் செக் செய்யும் போது உங்கள் விண்ணப்பம் show ஆகாமல் இருக்கும்.இதனால் விண்ணப்பிக்க வில்லையோ என்று பதற்றமடைகிறார்கள்.முதலில் நீங்கள் பதற்றமடையாமல் உங்களுக்கு விண்ணப்பித்தது ஏஜென்டா அல்லது கம்பெனியா என்பதை தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கு அப்ளை செய்வதில் இரண்டு விதம் உள்ளது.
நிறுவனத்தில் ஏஜென்டகள் விண்ணப்பிப்பது :
உங்களுடைய வேலைக்காக நிறுவனம் விண்ணப்பிக்கும்.
MOM இல் நேரடியாக வேலைக்கு விண்ணப்பிப்பது :
சிங்கப்பூர் வருவதற்கு approval பெறுவதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் விண்ணப்பிப்பது.
நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் போது உங்களிடம் வேலைக்கான தகுதி இருக்கிறதா? அவர்கள் கம்பெனியில் கோட்டா இருக்கிறதா? இதற்கு முன் சிங்கப்பூரில் வேலை பார்த்த history, உங்கள் பாஸ்போர்ட் பிளாக் லிஸ்ட்டில் உள்ளதா? என்பதையெல்லாம் நிறுவனம் ஆராய்ந்த பிறகே விண்ணப்பிப்பார்கள்.MOM இல் விண்ணப்பித்தவுடன் உங்களுக்கு தெரியப்படுத்துமாறு முன்கூட்டியே தெரிவித்து விடுங்கள்.
நீங்கள் work permit, pcm permit, shipyard permit ஆகிய பெர்மிட்களில் வேலைக்கு விண்ணப்பித்தால் நீங்கள் விண்ணபித்த சமயம் காலை வேளையாக இருந்தால் மாலைக்குள் MOM வெப்சைட்டில் Show ஆகிவிடும்.
Pending, Apporoved அல்லது No records என்று ஏதேனும் Show ஆனால்? அதற்கு என்ன அர்த்தம்?
Pending என்று இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்கள் verify இல் உள்ளது என்றும் உங்களுக்கு விண்ணப்பித்து விட்டார்கள் என்றும் அர்த்தம்.
No record found என்று இருந்தால் விண்ணப்பிக்கவில்லை என்று அர்த்தம்.
ரிஜெக்ட் என்று இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்கள் நிராகரிக்கபபட்டது என்று அர்த்தம். உங்களுடைய டாக்குமெண்ட் ரிஜெக்ட் ஆகி விட்டது என்று வந்தால் நீங்கள் சிங்கப்பூர் செல்ல முடியாது.
அப்ரூவல் என்று வந்தால் நீங்கள் சிங்கப்பூர் செல்ல அனுமதி கிடைத்து விட்டது என்றும் நீங்கள் விண்ணப்பித்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள் என்றும் அர்த்தம்.
காத்திருப்பு நேரம்:
TEP பாஸில் விண்ணப்பித்திருந்தால் மூன்று அல்லது நான்கு நாட்களில் அப்ரூவல் அல்லது ரிஜெக்ஷன் என்று தெரிந்து கொள்ளலாம்.
S Pass, E Pass, NTS permit ஆகிய பெர்மிட்களில் விண்ணப்பித்திருந்தால் 45 நாட்களுக்குள் தெரிந்து விடும்.
45 நாட்கள் என்றால் MOM இன் வேலை நாட்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
இது போன்ற தகவல்களை நாம் மட்டும் தெரிந்து கொண்டு பயன் பெறாமல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை பகிர்ந்து கொண்டு பயன் பெறுங்கள்.அவர்களும் யாரிடமும் ஏமாந்து விடக் கூடாது அல்லவா? அதனால் இந்த பயனுள்ள தகவல்களை ஷேர் செய்து பயனடையுங்கள். இது போன்ற முக்கியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள SGTAMILAN இணையப் பக்கத்தில் என்றென்றும் இணைந்திருங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan