பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!!

பயணிகளின் கவனத்திற்கு...!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை...!!!

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் சேவைகள் இன்று (பிப்ரவரி 7) காலை தாமதமானது.

இன்று (பிப்ரவரி 7) அதிகாலை 5.15 மணியளவில் பீஷான் பேருந்துப்  பணிமனையில் பழுதுபார்க்கும் வாகனம் ஒன்று பழுதடைந்தது.

இந்நிலையில் SMRT சேவைகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

வாகனம் பழுதானதால் வடக்கு-தெற்கு சேவையில் பயன்படுத்தப்படும் சில ரயில்கள் பணிமனையில் இருந்து புறப்பட முடியவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு-தெற்கு பாதையில் உள்ள அங் மோ கியோ நிலையத்திற்கும் ஜூரோங் கிழக்கு நிலையத்திற்கும் இடையில் பயணிகள் 10 நிமிட தாமதம் ஏற்படும் என்று அது கூறியது.

கிழக்கு-மேற்கு சேவையின் சில ரயில்கள் வடக்கு-தெற்கு சேவைக்கு திருப்பி விடப்பட்டன.

இதனால் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு சேவைகளில் பயணிகள் ரயிலுக்காக கூடுதல் ஒன்றரை நிமிடம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan