காபி பிரியர்களின் கவனத்திற்கு!! இந்த காப்பியை உட்கொண்டால் ஆபத்தா?
சிங்கப்பூர்:’KetoDiet Coffee’யில் தடை செய்யப்பட்ட பொருள் இருப்பதை சிங்கப்பூர் உணவு ஆணையம் கண்டறிந்துள்ளது.
எனவே அதை வாங்கவோ, உட்கொள்ளவோ வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் செயல்படும் பல்வேறு உள்ளூர் இ-காமர்ஸ் தளங்களில் KetoDiet Coffee விற்கப்படுகிறது.
‘KetoDiet Coffee’ எடையைக் குறைக்கும் பொருளாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
இ-காமர்ஸ் தளங்களில் அதை விற்பனை செய்வதை நிறுத்துமாறு SFA அமைப்பு தெரிவித்துள்ளது.
காபியில் தடை செய்யப்பட்ட பொருள் Sibutramine இருப்பது தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் 2010-ஆம் ஆண்டு முதல் Sibutramine தடை செய்யப்பட்டுள்ளது.
இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நம்பப்படுகிறது.
KetoDiet Coffee உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அமைப்பு அறிவுறுத்துகிறது.
Follow us on : click here