சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவு பொருட்களை சிங்கப்பூருக்குள் கடத்த முயற்சி!!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவு பொருட்களை சிங்கப்பூருக்குள் கடத்த முயற்சி!!

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 160 கிலோ காய்கறிகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சிங்கப்பூர் உணவு நிறுவனம் பறிமுதல் செய்துள்ளது.

குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் இணைந்து இரண்டு நாட்கள் சோதனை நடத்தியது.

இந்த சோதனையில், உணவுப்பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்பவர்களுக்கு $10,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.