சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு மாட்டிறைச்சி கடத்த முயற்சி!!

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு மாட்டிறைச்சி கடத்த முயற்சி!!

டிசம்பர் மாதம் 20ஆம் தேதி காலை 11:40 மணியளவில் செகண்ட் லிங்க் என்ற சோதனை சாவடியில் நடந்த சோதனையில்,
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்த காரில் ஜப்பானிய Wagyu வகை மாட்டிறைச்சியை 21 கிலோவிற்கு அதிகமாக மூன்று பொட்டலங்கள் வைத்து இருந்ததாக 8 world  செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. 

மலேசியாவில் அந்த மாட்டு இறைச்சிக்கு ஹலால் சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழை கால்நடை மருத்துவ ஆணையம் வழங்கவில்லை என்பது விசாரணையின் போது தெரியவந்தது.


பறிமுதல் செய்த இறைச்சியின் மதிப்பு சுமார் 18,800 ரிங்கிட் அதாவது சிங்கப்பூர் மதிப்பின்படி 5700 வெள்ளி.