சிங்கப்பூரில் AstraZeneca நிறுவனத்தால் உருவாகவிருக்கும் பிரம்மாண்டம்….

சிங்கப்பூரில் AstraZeneca நிறுவனத்தால் உருவாகவிருக்கும் பிரம்மாண்டம்....

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் AstraZeneca நிறுவனமானது $2 பில்லியன் செலவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

மக்களின் உணவு பழக்க வழக்கம் மாறிவரும் நிலையில், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் பல வகைகளில் உருவெடுத்து மக்களை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. புற்று நோயுடன் வாழ்க்கையை கடப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கும்.புற்றுநோய் பாதிப்பின் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க தான் செய்கிறது. எனவே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருந்துகளும் அதிக அளவில் தேவைப்படுவதால் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பு மருத்துவத்துறையினரால் வரவேற்கப்படுகிறது.

அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமானது கடந்த சில ஆண்டுகளாகவே தனது தயாரிப்புகளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

தற்போது சிங்கப்பூரிலும் புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பு ஆலை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி கழகத்தின் தலைவரான பிங் சியொங் பூன் (Png Cheong Boon) AstraZeneca புற்றுநோய் மருந்து தயாரிப்பு ஆலை நிறுவவுள்ள திட்டத்தை வரவேற்றுள்ளார்.

இதில் புற்றுநோய் தடுப்பு மருந்துகளும், நோய் எதிர்ப்பு மருந்துகளும் தயாரிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது
.

இதனால் பொருளியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.