Latest Sports News Online

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை தட்டி தூக்கிய தமிழக வீரர் அஸ்வின்… தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலர் என்ற இடத்தை பிடித்தார்!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நாள் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் புது சாதனை படைத்துள்ளார். டோமினிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதலில் களமிறங்கிய கேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்திரபால் ஆகியோரை அஸ்வின் அவுட் செய்தார். அதனை அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் முதல் ஓவரிலேயே ரேமன் ரைபரை வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட்டுகளான பிளாக் வுட், சிராஜின், ஜோஸ்வா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்தனர். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது.

இந்த கிரிக்கெட் போட்டியில், குறிப்பாக தமிழக வீரர் அஸ்வினின் விளையாட்டு அனைவராலும் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதற்கு முன்னர் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களில் அணில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளையும் மற்றும் ஹர்பஜன்சிங் 711 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் மூன்றாவதாக சேர்ந்துள்ளார் தமிழக வீரர் அஸ்வின் . 2010ல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த அஸ்வினுக்கு தற்பொழுது 36 வயதாகின்றது. இதுவரை 113 ஒரு நாள் போட்டிகள், 93 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் அஸ்வின். எனவே ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பௌலராக உயர்ந்துள்ளார்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம்3129 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.