இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்...!!!

துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.
இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஒரு தொடரில் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதன் அடிப்படையில் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படுகிறது என்பதே தவிர காரணம் சொல்வதால் கிடைக்காது” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணி துபாயில் தொடர்ந்து விளையாடுவது குறித்து பயிற்சியாளரிடமும் கேப்டனிடமும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள் குறித்து தனக்கு சிரிப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
“தென்னாப்பிரிக்க அணி 2009 சாம்பியன்ஸ் டிராபியில் அதன் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடியது. ஆனால் அவர்கள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர்.”
“தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு வராதது அந்த அணியின் தவறா? அது எந்த அணியாக இருந்தாலும் சரி, அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று கூறினார்.
இந்தியா இப்போது இறுதிப் போட்டியில் உள்ளது என்றால் அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். இறுதிப் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதியான அணியாக வருவதற்கு காரணம் அந்த அணியில் உள்ள சிறப்பான வீரர்கள்.
இந்தியா இறுதிப் போட்டியில் வென்றால் நாம் தொடர்ந்து இரண்டு ஐசிசி தொடர்களை வென்றுள்ளோம் என்று நினைத்து அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
அதைத் தவிர, மற்றவர்கள் கொடுக்கும் விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதை வெளிநாட்டு வீரர்கள் மட்டுமின்றி சில இந்தியர்களும் இப்படிப் பேசுவதைப் பார்த்து தனக்கு கோபம் வருவதாக அஸ்வின் கூறியுள்ளார்.
Follow us on : click here