ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!!

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!!

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் அணி மலேசியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்று முன்னேறியது.

அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி வியட்நாமை வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமையன்று எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஆறு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன.


ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி Jalan Besar மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் இரண்டு மடங்கு விலையில் இணையத்தில் விற்கப்பட்டு வருகின்றன.

போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை மறுவிற்பனையாளர்களிடம் வாங்க வேண்டாம் என்றும், அப்படி வாங்கினால் காற்பந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதி மறுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் காற்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

காற்பந்து அரையிறுதி ஆட்டத்தைக் காண நேற்றிரவு முதலே ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து நுழைவுச்சீட்டுகளை வாங்கினார்கள்.