ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!!
ASEAN கோப்பைக் காற்பந்து போட்டிக்கான குழு நிலை ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரும் ,மலேசியாவும் மோத உள்ளன.இப்போட்டி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெறும்.
அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற வேகத்தில் சிங்கப்பூர் உள்ளது.
சிங்கப்பூர் அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ அரையிறுதிக்கு முன்னேறி விடும்.
டிசம்பர் 11 ஆம் தேதி சிங்கப்பூரும் கம்போடியாவும் மோதியது.முதல் ஆட்டத்திலேயே சிங்கப்பூர் வெற்றி பெற்றது.
டிசம்பர் 14 ஆம் தேதி சிங்கப்பூர், திமோர் லெஸ்ட்டேவை எதிர் கொண்டது.இப்போட்டியில் சிங்கப்பூர் தனது இரண்டாவது வெற்றியைப் பதித்தது.
டிசம்பர் 17 ஆம் தேதி தாய்லாந்துடன் சிங்கப்பூர் மோதியது. ஆனால் இப்போட்டியில் சிங்கப்பூர் தோல்வி கண்டது.
A குழுவில் 9 புள்ளிகளுடன் தாய்லாந்து முன்னிலை வகிக்கிறது.
சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் 4 புள்ளிகளுடன் மலேசியா மற்றும் கம்போடியா உள்ளன.
குழு நிலை ஆட்டத்தில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பைப் பெறும்.
இதன் அடிப்படையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிங்கப்பூரின் புள்ளிகள் 9 ஆக உயரும்.
அல்லது டிராவானாலோ 1 புள்ளி பெற்று 7 ஆக அதிகரிக்கும்.
Follow us on : click here