நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடிவரும் நிலையில்…..தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்….. மக்கள் பீதி….

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு பிறகு, Herat-ல் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் புதன்கிழமை அன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், 130 பேர் காயமடைந்தனர் என்றும் பொது சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.0 மற்றும் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால் சேதம் மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கார்கள், கூடாரங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் தேடி வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் 12000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.பலர் குடும்பங்களை இழந்தனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அதிகாரிகள் மக்களுக்கு பெரிய அளவில் தங்குமிடம் அல்லது கூடாரங்கள் வழங்குவது சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.