இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!!

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!!

இந்தோனேசியாவில் கோவில்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கலைப் பொருள்கள் திருடப்படும் சம்பவங்கள் இந்தோனேஷியாவின் மற்ற பகுதிகளை விட பாலித்தீவில் அதிக அளவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பாலித்தீவு இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தீவு.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் உண்டு.

பாலித்தீவில் குறைந்தது பத்தாயிரம் கோயில்கள் உள்ளன.

விலைமதிப்பில்லாத புனிதமான பொருள்களின் இல்லமாக இருக்கும் அங்கு முறையான அளவு பாதுகாப்பு இல்லை.

2024ஆம் ஆண்டு வடக்கு பாலிதீவில் சிங்க ராஜா இந்து கோவிலில் திருட்டு சம்பவம் நிகழ்ந்தது.

இந்து கடவுள்களின் சிலை மற்றும் அங்கு இருந்த வெள்ளி தட்டுகள் போன்ற பல பொருட்களை திருடிச் சென்றனர்.

திருடியவர்களை கைது செய்தாலும் அவர்களிடம் இருந்து எந்த பொருளையும் மீட்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

பல தலைமுறைகளாக பாதுகாத்த பொக்கிஷங்கள் அனைத்தும் திருடப்பட்டது மிகவும் கவலை அளிப்பதாக ஆலயத்தின் பராமரிப்பாளர் தெரிவித்தார்.

தவறானவர்களிடம் சிக்கும் அத்தகைய பொக்கிஷங்கள் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்ய பிற நாடுகளுடன் இந்தோனேசியா பணியாற்றுகிறது.