அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!!

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!!

ஐசிசி T20 உலக கோப்பை 2024 ல் இந்திய அணி எந்த போட்டியிலும் தோற்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறி உள்ளது.

ஜூன் 24 அன்று செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இதில் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவிற்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ஆஸ்திரேலியா முடிந்தவரை போராடி 20 ஓவர்களில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்தியாவைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோல இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகின்றார்.11 விக்கெட்டுகளை எடுத்த பும்ராவை விட அர்ஷ்தீப் சிங் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இதன்மூலம் டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் 10 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்தார். இதன் மூலம் இரண்டு வெவ்வேறு T20 உலக கோப்பையில் 10 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் அர்ஷ்தீப் சிங்கிற்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து சாதனைகளை படைத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அப்போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.