ஜனவரி 9-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தோ பாயோ லோரோங் -4 என்ற இடத்தில் உள்ள Block 62B அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஜன்னல் விளிம்பில் மதிக்கதக்க 77 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற காவல்துறை அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. காவல்துறை மட்டுமல்லாமல் சிங்கப்பூர்க் குடிமைக் தற்காப்பு படையினரும் அவர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினரையும் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரையும் விலகி இருக்கும்படி அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதிகாரிகள் அவரை மீட்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வந்தனர்.
பின்னர் மேல் தளத்திலிருந்து கயிறு வழியாக இறங்கி அவரைக் காப்பாற்றினர். உயிர்காக்கும் காற்றுப்பையை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஏற்பாடு செய்திருந்தனர். இச்சம்பவம் குறித்து 8World தகவல் வெளியிடப் பட்டது. இச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரவியது.அவரை மீட்டதற்கு பின் கைது செய்யப்பட்டார். மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.