பொது இடத்தில் சண்டையிட்ட ஆயுதப்படை அதிகாரிகள்!!

பொது இடத்தில் சண்டையிட்ட ஆயுதப்படை அதிகாரிகள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் மூன்று பேர் மீது பொது இடத்தில் சண்டையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங் ஸி வேய் ரேஞ்செர்,டாங் சீ டாட் கெல்வின் மற்றும் கெவின் நிக்கலஸ் சைமன் ஆகிய மூன்று அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் மூவரும் அடுத்த மாதம் நவம்பர் 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற வழக்கு முடிந்ததும் அவர்களுக்கு எதிராக மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படை பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என அமைச்சகம் செய்தியிடம் தெரிவித்துள்ளது.

Follow us on : click here ⬇️